விமர்சனம்

விமர்சிப்பவர்கள் விமர்சித்து கொண்டே தான் இருப்பார்கள்!
விமர்சனங்களை தவிர்க்காதீர்கள்.
விமர்சனங்களில் வரும் நேர்மறையை எடுத்துக்கொண்டும்,
எதிர்மறையை தவிர்த்துக் கொண்டும்,
வாழ்பவர்களே,வாழ்க்கையில் வெற்றிப் பெறுகிறார்கள்!

நவீன உலகம்

மனித இனமடா இது!
நவீன இயந்திரங்களை வைத்து நம் வேலையை சுலபமாக்கியதும் இத்தமிழகம் தான்!
மனித இயந்திரத்தை வைத்து நம் மலத்தை அள்ள வைப்பதும்
இத்தமிழகம் தான்!
தன் மலத்தைக்கூட அள்ள மறுக்கின்ற ஈனப் பிறவிகளின் மலத்தை,தன் இரு கரங்களால் அள்ளும் தாழ்த்தப்பட்டோரின் நிலைமை என்ன?
வாழ்வா? சாவா?
இதற்கு முற்றுப் புள்ளி இல்லையா?
அல்லது இது அவர்களின் வாழ்நாள் சாபமா?

விவசாயி

Photo by Kelly Lacy on Pexels.com
ஒவ்வொரு சோற்றுப் பருக்கையை வீணாக்கும் பொழுது
நமக்கு விவசாயி-ன் வலிகள் தெரியவில்லை!
ஒரு சோற்றுப் பருக்கைக்காக அலையும் பொழுது தான்
விவசாயி-ன் வலிகள் தெரிய வரும்!

அம்மா

Photo by Helena Lopes on Pexels.com
தாய்மொழி
தமிழ் கூட
தடுமாறி நிற்கிறது
உன்னைப்பற்றி
எழுதும்போது!
எவ்வளவு யோசித்தாலும்
பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை!
உன்னைத் தவிர
"அம்மா"

தமிழ்

Tamizhi Script – Tamizhi Web Series
உயிரும்,மெய்யும் கலந்து 
உயிர்மெய்யாக உருவெடுத்து
வலிகளை வரிகளாக அடக்க முடியும் என்றால்
அது என் தாய் மொழியினால் மட்டும் தான் முடியும்!
என்றும் அழியா மொழி அல்ல எம் தாய்மொழி!
என்றும் அழிக்க முடியாத மொழியே எம் தாய்மொழி!

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started